பேருவளையில் காணாமல் போயிருந்த சகோதரி சடலமாக மீட்பு!

Date:

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயிருந்த பேருவளை முஸ்லிம் யுவதி (25) இன்று அதிகாலை பேருவளை ஆழ்கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கடந்த முதலாம் திகதி நள்ளிரவில் இருந்து காணாமல் போயிருந்தார். குறித்த யுவதியை தேடும் பணியில் பேருவளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் கடந்த மூன்று தினங்களாக ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் நேற்று பிற்பகல் பேருவளை ஆழ்கடலில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று பல மணித்தியாலங்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். என்றாலும் நேற்று சடலம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இன்று அதிகாலை பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக மீண்டும் மீனவர்கள் அறிவித்ததை அடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று குறித்த சடலத்தை கரை சேர்த்துள்ளனர்.

காணாமல் போயிருந்த யுவதியின் தந்தை இது தனது மகளுடையது என்று சடலத்தை ஸ்தலத்திற்கு சென்று உறுதிப்படுத்தினார்.

அதன் பின்னர் மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி நஸ்ரின் அவர்கள் முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த யுவதிக்கு கடந்த பல வருடங்களாக அவ்வப்போது மனநலம் பாதிக்கப்படுவதாகவும், அதற்காக பல ஆண்டுகளாக உளவள சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...