பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது!

Date:

பொருளாதார நெருக்கடியின் போது மற்றைய நாடுகளை விட இந்தியா இலங்கைக்கு உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவ இந்தியா துணிச்சலான முடிவுகளை எடுத்ததாகவும், சுமார் 3.9 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு கடன் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அரசாங்கம் துணிச்சலான முடிவுகளை எடுக்க முன்வந்தது மட்டுமல்லாமல், இந்திய மக்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தனர் என்று குறிப்பிட்டார்.

இலங்கையை காப்பாற்ற இந்தியாவின் தலையீடு மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதாகவும், அலி சப்ரி கூறியுள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...