மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் இன்று (30) காலை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சபாநாயகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தூதுவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தலைமையிலான செயலாளர் குழாம், பாராளுமன்ற பொதுச் செயலக ஊழியர்கள், பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்துடன் இணைந்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் தாங்கிய இறுதி ஊர்வலம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் வந்ததையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மற்றும் பிரதம செயலாளர் மற்றும் பிரதிச் செயலாளர் திருமதி குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் சடலத்தை பெற்றுக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து சிவப்பு கம்பளத்தின் மீது சார்ஜன்ட், பிரதி சார்ஜன்ட் மற்றும் உதவி சார்ஜன்ட் ஆகியோரால் உடல் கொண்டு செல்லப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்தின் முன் மண்டபத்தில் அமைந்துள்ள விசேட விழா மண்டபத்தில் வைக்கப்பட்டது.
இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், ஜனாதிபதி இரங்கல் அறிக்கையை எழுதிதினார்.