மஹிந்த, பசிலுக்கு எதிரான பயணத்தடை நீக்கம்!

Date:

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை இனிமேல் தொடராது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் உயர் நீதிமன்றம் பயணத்தடை உத்தரவை நீடிக்கவில்லை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இரண்டு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட பயணத்தடை இனி நடைமுறையில் இல்லை என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.

Popular

More like this
Related

ஷிரந்தி ராஜபக்ச முன் பிணை கோரி நீதிமன்றில் மனு!

சிகிச்சையின் பின் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம்...

கிழக்கு ஆப்பிரிக்க மோதல்கள்: அரசியல் ரீதியிலான அமைதித் தீர்வுக்கு எகிப்து, எரித்திரியா, சோமாலியா, சூடான் அழைப்பு!

சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் எத்தியோப்பியாவில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் உள்ளிட்ட...

இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய ஆதரவாளர்கள்

சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அவரது...