மார்ச் 30 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஏற்படவுள்ள மாற்றம்!

Date:

ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும்  மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து  ‘Spoken English’  ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும். தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேவையான பாட மேம்பாடு மற்றும் வள திட்டமிடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவாலை வெற்றிகொள்ள அமைச்சு செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...