மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!

Date:

சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றார் .

தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக அவருக்கு வாக்களித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சீன பாராளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை ஜனாதிபதியாக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர் வெற்றிகளுடன், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் மாறி வருகிறார்.

இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற வரம்பை கடந்த 2018-ம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கி இருந்தார். இதன் அடிப்படையில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...