யூரியா உரத்தின் விலையை குறைக்கத் தீர்மானம்!

Date:

யூரியா உரத்தின் விலை இவ் வருடம் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

உயர் பருவத்தில் 10,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500-9000 ரூபா வரை குறைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

சீன அரசாங்கத்தினால் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளை வழங்கும் நிகழ்வை அவதானித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்குனுகொலபெலஸ்ஸ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெறுவதற்காக திரண்டிருந்த விவசாயிகளை அமைச்சர் சந்தித்து அவர்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோ ரி.எஸ்.பி அல்லது மண் உரம் வழங்க விவசாயத்துறை பரிந்துரைத்துள்ளதாகவும் அதே அளவு உரம் விவசாயிக ளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் பண்டி உரத்தின் விலை உயர்மட்டத்தில் உள்ளதால் அந்த உரத்தின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...