ரமழான் மாதம் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்ததாக அமையட்டும்: சவூதித் தூதுவர்

Date:

ரமழான் மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

ரமழான் மாதத்தை முன்னிட்டு  அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, கருணையும், நற்செயல்களும் நிறைந்த, தவறுகள் மன்னிக்கப்படும், புனிதமிகு அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மிகப்பெரும் மகிழ்ச்சிகர நிகழ்வை நினைவுபடுத்தும் அருள் மிகு புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு, அப்புனிதமிகு மாதத்தை அடைந்துகொள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நான் இலங்கையில் அடைந்துகொண்ட முதல் புனிதமிகு ரமழான் மாதம் இதுவாகும்.
ஆகவே அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் அருளும் நிறைந்ததாக அமையப் பெற பிரார்த்திக்கின்றேன்.

இப்புனிதமிகு மாதத்தினை அனைவரும் அடைந்து, நோன்பு நோற்று நற்கிரியைகளில் ஈடுபடும் பாக்கியத்தை அடையவும், அனைவரது நற் செயல்களையும் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்’ என்றார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...