ரஷ்யத் தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்: முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன!

Date:

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் நேற்று சந்தித்தார்.

கோட்டே,  ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு முதல் முறையாக விஜயம் செய்த புதிய ரஷ்ய தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவிற்கு ஜெனரல் குணரத்ன அவர்களினால்  வரவேற்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் ஆகியோருக்கிடையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இருதரப்பு பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவராக  நியமிக்கப்பட்ட பின்னர் கடந்த நவம்பரில் இலங்கைக்கு வருகை தந்த  ட்ஜகார்யன், ஜனாதிபாதி  ரணில் விக்ரமசிங்கவிடம்   கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி தனது நியமனக் கடிதத்தை கையளித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் ரஷ்ய தூதுவருக்கிடையிலான சந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...