ரோகிதஷவின் கடன் அட்டையை திருடி 400 அமெரிக்க டொலர்கள் வரை மோசடி!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டையில் இருந்து கிட்டத்தட்ட 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான முறையில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாரஹன்பிட்டிய பொலிஸார், நீதிமன்றத்தில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளனர்.
நபர் ஒருவர் ரோகித ராஜபக்சவின் கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ரோஹித ராஜபக்ஷ கடந்த 3ஆம் திகதி மாத்தறையில் உள்ள வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடன் அட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் தலைமை அலுவலக மேலாளருக்கு உரிய வங்கிக் கணக்கு அறிக்கைகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என போலீஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...