விமான நிலையத்திற்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பாடசாலை மாணவன்!

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில், பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவர் நேற்று (25) BIA அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்து வெடிகுண்டு இருப்பதாகக்  கூறியுள்ளார்.

அதிகாரிகள் முனையத்தை சோதனை செய்தபோது, ​​சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் இல்லை என்றும் அது நகைச்சுவை என்றும் தெரிவித்தார்.

களுபோவில பிரதேசத்தில் வசிக்கும்  பாடசாலை மாணவனை வரவழைத்த பொலிஸார், பின்விளைவுகளை உணராமல்  அழைப்பு குறித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதனையடுத்து குறித்த மாணவனை  கடுமையாக கண்டித்து, தான் செய்த செயலின் தீவிரம் தனக்கு தெரியவில்லை என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...