வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டம்!

Date:

வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பதற்கு பிரதிநிதிகளை நியமிக்க முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தீர்மானித்துள்ளார்.

அதன்படி நேற்று (28) பிரித்தானியாவுக்கான பிரதிநிதியாக கன்னையா கஜன் நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் வழங்கினார்.

இந்த நியமனம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் மற்றும் இந்த பிரதிநிதிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு பிரித்தானியாவிலிருந்து எரிசக்தி, விவசாயம், நகர அபிவிருத்தி, கனிம வளங்கள் ஆகியவற்றிற்காக முதலீட்டாளர்களை ஒருங்கிணைத்தல் ஆகும்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கண்ணையா கஜன் பிரித்தானியாவில் வசிப்பவர். அவர் சஃபோல்க் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் பல வணிகங்களின் உரிமையாளராக பணியாற்றுகின்றார்.

அதேநேரம்,கிரேட் பிரிட்டனில் உள்ள கேர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் திட்ட மேலாளராகவும், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

பிரித்தானியாவில் ‘லோட்டஸ் வில்லேஜ் ஹோம் கேர்’ கம்பனியின் ஸ்தாபகராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், வடக்கிலுள்ள இலங்கை முகவரகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், உலகப் பொருளாதார சிவாஸ்லோஸ்மென்ட்டின் நிறுவனராகவும் Food of Ceylon இன் நிறுவனராகவும் பணியாற்றியுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு செயற்பாடுகளில் கைதேர்ந்த கன்னையா கஜன் தனது வியாபார நுணுக்கம் மற்றும் முகாமைத்துவத்தை பயன்படுத்தி பல முதலீட்டு வாய்ப்புகளை இலங்கைக்கு கொண்டு வர தயாராக உள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...