வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மாத்திரம் வழங்கப்படும்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்களுக்கு அடிப்படை வேதனத்தை மாத்திரம் செலுத்துவது பொருத்தம் என தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இம்மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு திகதியிடப்பட்டிருந்தது. எனினும் அது பின்னர் பிற்போடப்பட்டது.

இதன்படி, அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் தாமதமடையும் காலம் வரை அரச சேவையாளர்களுக்கு அடிப்படை வேதனத்தை மாத்திரம் செலுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 3 ஆயிரம் அரச பணியாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு வேதனமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தல் வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளமையுடன் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...