சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த மதுபானத்துக்கான உரிமங்கள் பல மாதங்களாக தாமதமாகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அரச நிதிக்குழுவின் தலைவர் என்ற வகையில் அவை அனைத்தையும் அங்கீகரிப்பதாக தெரிவித்தார்.
அதன்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
ஆசியாவிலேயே நாட்டை உயர்ந்த இடத்திற்கு உயர்த்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.