40 துறைசார் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 20 அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மருத்துவம், துறைமுகம், மின்சாரம், நீர்பாசனம், அஞ்சல், வங்கி மற்றும் கல்வி உள்ளிட்ட 40 துறைசார் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இதேவேளை வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.