40 அரச நிறுவனங்களை மூட தீர்மானம்: இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

Date:

சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும், குறித்த நிறுவனங்களை நிதியமைச்சின் கீழ் கொண்டு வந்து, தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...