7 ஒஸ்கார் விருதை வென்ற ‘Everything Everywhere All At Once’ திரைப்படம்!

Date:

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ‘Everything Everywhere All at Once’ திரைப்படம் ஒஸ்கார் விருது வென்றுள்ளது.

அகாடமி விருது எனப்படும் 95வது ஒஸ்கார்  விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கார்  விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படம் வென்றது.

சிறந்த நடிகைக்கான விருது மிஷெல் யோ வென்றார். ஒஸ்கார் விருது வென்ற முதல் ஆசிய பெண் இவர் என்ற என்ற சாதனையையும் படைத்தார்.

ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படக்குழுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சிறந்த துணை நடிகருக்கான விருதை KeHuy Quan பெற்றார்.

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார். சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார்  விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக இயக்குனர்கள் டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) வென்றனர்.

சிறந்த படத்தொகுப்பிற்கான ஒஸ்கார் விருதை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார்.

சிறந்த திரைக்கதைக்கான விருதையும் ‘Everything Everywhere All At Once’ திரைப்படம் வென்றுள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...