ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ஜனாதிபதி ரணில், கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை சட்டக்கல்லூரிகளில் தனது கல்வியைத் தொடர்ந்திருந்தார்.
சட்டத்தரணியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த ரணில், 1977ஆம் ஆண்டு பியகம தொகுதியில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கடமையாற்றி வரும் ரணில் விக்ரமசிங்க, இதற்கு முன்னர் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.