9-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு துபாயில் இன்று ஆரம்பம்!

Date:

துபாயில் 9-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு இன்று (18) ஆரம்பமாகி 20-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.

அவரை மாநாட்டின் துணைத்தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்க உள்ளார்.

இது குறித்து பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவிக்கையில்,

‘துபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும்.

தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க இந்த மாநாடு பெரும் துணையாக இருக்கும்.

3 நாட்கள் துபாய் மாரியட் அல் ஜடாபில் நடக்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

எனவே தமிழ்நாட்டில் உள்ள வளம், அரசின் கொள்கை நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவம், போன்ற பல விஷயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...