IMF அனுசரணையுடன் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி!

Date:

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் கலந்துரையாடலில் உறுதி அளித்துள்ளார்

அனைத்து இருதரப்பு உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களையும் வெளிப்படைத்தன்மையுடனும், ஒப்பீட்டுத் தன்மையுடனும் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத் திட்டத்திற்கான அனைத்து நிபந்தனைகளையும் இலங்கை தற்போது பூர்த்தி செய்துள்ளதுடன், இந்த மாதத்துக்குள் கடன் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

Popular

More like this
Related

YMMA இன் மனித நேயப் பணி வெல்லம்பிட்டியில்..!

கொழும்பு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், வை.எம்.எம்.ஏ. பேரவையின் உதவிச்செயலாளர் அப்துல்...

ராஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துங்கள்: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள...

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என சபாநாயகர்...

இன்றைய நாணய மாற்று விகிதம்

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும்...