சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நிதியுதவி கிடைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நிவாரணம் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடுத்த பகுதி மிகவும் கடினமானது எனவும் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் இரண்டாம் தவணை தொகை கிடைக்காது எனவும் அதனால் தான் கடனை பகுதிகளாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.