சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தில் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, மருந்து தட்டுப்பாடு, மருந்து விநியோகம், ஆய்வக விநியோகம் ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சங்கத்தின் தலைவர் நிபுணர் டாக்டர் ஜி.ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
சுகாதார அமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட சமூக நலப் பணிகளை முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது.
மேலும், உலக வங்கி மற்றும் பிற கடன் உதவி வழங்குநர்களிடமிருந்து விரைவான கடன் உதவியாக மேலும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இப்போது பெற எதிர்பார்க்கிறது.