இன்று முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம்!

Date:

இன்று(09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

அதற்கமைய தொழிற்சங்களினால் வழங்கப்பட்ட ஒருவார கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் , அரசாங்கத்தினால் எவ்வித பதிலும் வழங்கப்படாமையினால் இன்றிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட அவை தீர்மானித்துள்ளன.

இதனால், இன்று முதல் பல துறையின் சேவைகள் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...