கலைஞர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உட்பட 266 எம்.பி.க்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்!

Date:

ஓய்வூதியம் பெறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 266 ஆக அதிகரித்துள்ளது.

120 எம்.பி.க்கள் இறந்துவிட்டதால், அவர்களது மனைவிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில்  அண்மையில் அறிக்கையொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் 15 கோடி ரூபா செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய 15 முன்னாள் பெண் எம்.பி.க்கள் ஓய்வூதியம் பெறுகின்றார்கள்.

ஜனதா விமுக்தி பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் இருபத்திமூன்று பேர் ஓய்வூதியம் பெறுவதுடன்,  குறித்த அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றிய ஐவர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

கலைஞர்களான மாலனி பொன்சேகா, ஜீவன் குமாரதுங்க, உபேக்ஷா ஸ்வர்ணமாலி மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரும் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

மேலும் இரண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஓய்வூதியம் பெறுகின்றனர் அவர்கள் அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜெயசூரிய.

அதுமட்டுமின்றி அரசியல், சமயம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிஞரும், தொடர்பாளருமான  ஜே.ஆர்.பி.சூரியப்பெரும முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றியதுடன் ஓய்வூதியமும் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக, உறுப்பினரின் ஓய்வூதியம், நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கான 18095 தொகையுடன் மற்றொரு கொடுப்பனவான 25000ஐ சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் ஓய்வூதியம் 43095 ரூபாவாகும்.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...