போராட்டக்காரர்களை கலைக்கும் போது, காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்துவதில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்றும் தெரிவித்தார்.
பொதுவாக, திறந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி கண்ணீர் புகைக்குண்டுகள் பெறப்படுகின்றன.
போராட்டக்காரர்களை கலைக்க, எந்தவொரு தயாரிப்பு காலாவதியானாலும், அது சிறந்த முடிவுகளைத் தராது. காலாவதி திகதிக்கு பின்னர் எரிவாயு உரிய வகையில் இயங்காது.
எனவே அதனை பயன்படுத்துவதால் பயன் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்