இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் மற்றும் எகிப்து தூதுவர் ஆகியோர் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமடைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
நேற்றைய தினம் (11) நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கோப் 28 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இம்மாநாடு, இவ்வருடம் (2023) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
தற்போது கோப் 27 மாநாட்டின் தலைமைப்பதவி எகிப்திடம் உள்ள நிலையில், புதிய தலைமைத்துவத்தை ஐக்கிய அரபு இராச்சியம் பாரமேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எகிப்தில்,2022 இல்,நடந்த கோப் 27 மாநாட்டில், இலங்கை முன்வைத்த முன்மொழிவுகள் பற்றி கோப் 28 மாநாட்டிலும் கவனம் செலுத்தப்படும்.