சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல் : 5 பேர் பலி -11 பேர் படுகாயம்!

Date:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் ஜூபலாந்து மாகாணம் பர்டேரா பகுதியில் அரசாங்க விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு அரசாங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மாளிகைக்குள் திடீரென ஒரு வாகனம் அனுமதியின்றி உள்ளே நுழைந்துள்ளது. வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட அந்த வாகனத்தில் இருந்தவர் உள்ளே நுழைந்ததும் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் அந்த வாகனத்தில் இருந்தவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த தற்கொலை படை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...