தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

Date:

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க தவறியமைக்காக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இவ்வாறு   நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியின் ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.

இதனை பரிசீலித்த நீதியரசர்கள், தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்தும் விசாரணை செய்ய முடியாது என அறிவித்தனர்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...