நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் வேகமாக அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் பதிவாகும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் மேல் மாகாணத்தில் வடமத்திய, வடமேல், ஊவா ஆகிய மாகாணங்களிலும்  அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

இந்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளினால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்றைய தினம் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கொழும்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

 

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...