பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது!

Date:

அரசாங்கத்தின் வரிக் கொள்கையை உடனடியாக மாற்றுமாறு கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இன்று காலை 8 மணியுடன் பல தொழிற்சங்கங்கள் தற்காலிமாக கைவிட்டுள்ளன.

நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தத்தில் அரச மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மின் பொறியியலாளர்கள், வங்கி அதிகாரிகள், பெட்ரோலியம், நீர் வழங்கல், சாலை மேம்பாடு, கல்வி நிர்வாகம், சர்வேயர்கள், உள்ளாட்சி வருவாய் சங்கங்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 6% முதல் 36% வரை விதிக்கப்படும் வரி பல துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமது கோரிக்கைகளை பரிசீலிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்ததையடுத்து தற்போதைய பணிப்புறக்கணிப்பு இன்று (16) காலை 8 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொடுப்பனவு வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று காலை 7 மணிக்கு முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளார்.

மின்சார ஊழியர்களினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வங்கி ஊழியர்கள் இன்று காலை 8 மணி முதல் வழமை போன்று கடமைகளில் ஈடுபடுவார்கள் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களின் ஒற்றுமைக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்ததாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவு தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக லோகோமோட்டிவ் ரயில்வே பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.யு.கொந்தசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தமது எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் நோக்கில், தொழிற்சங்கம் இன்று பிற்பகல் கூடவுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...