பண்டாரவளையில் மண் சரிவு: 6 பேர் காயம்!

Date:

பண்டாரவளை – பூனாகலை, கபரகலையில் தொடர் குடியிருப்புகளில் நேற்றிரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த 6 பேர் (3 பெண்கள், 3 ஆண்கள்) உடனடியாக பொதுமக்களால் மீட்கப்பட்டு கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என அனர்த்த முகாமை நிலையத்தினர் தெரிவித்தனர்.

கடைகள் மற்றும் குடியிருப்புகள் என 4 கட்டிடங்கள் முற்றாகவும், 20 கட்டிடங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இரண்டு தொடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 220 பேர் பூனாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...