நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சு ஏற்கனவே இந்திய அரசுடன் பல சுற்று வெற்றிகரமான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய இந்தியாவில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் உரங்களை கொண்டு வர இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி வழங்கப்பட்டது.
நாட்டிற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அவை பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய கடன் வசதிகளைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நம்புகிறது.