‘பஸ் உதிரி பாகங்களின் விலைக் குறைப்பு தொடர்பில் ஆராய முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர் பதவி விலக வேண்டும்’

Date:

 பஸ் உதிரி பாகங்களின் விலைக் குறைப்பு மற்றும் சேவைக் கட்டணங்களை ஆராய முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர்  பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.

அதேநேரம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் தனியான குழுவொன்றை நியமிக்கவோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் (NTC) கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவோ முடியாவிட்டால், அவர் பதவி விலக வேண்டும் எனவும், பிரச்சினைகளை கவனிக்க வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஏப்ரல் 1 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தத்திற்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருளின் விலையில் பெரும் வீழ்ச்சியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பரிசீலித்து வருவதாகவும், இந்த கோரிக்கை குறித்து மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், பஸ் கட்டணத்தை குறைப்பதன் மூலம் அந்த நன்மையை மக்களுக்கும் வழங்க முடியும்.

அமெரிக்க டொலரின் மதிப்பு குறைவது, உதிரி பாகங்களின் விலையை நேரடியாக பாதிக்கும். ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் திகதி பஸ் கட்டண திருத்தம் நடைபெறும்.

ஆனால் ஏப்ரல் 1 ஆம் திகதி எரிபொருள் விலை குறையும் பட்சத்தில் மக்களுக்கான பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...