புத்தளம் மாவட்டத்தில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று அடையாளம் கண்டுள்ளது.
பதின்மூன்று மாவட்டங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய காற்றின் தரம் இருப்பதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, களுத்துறை, அம்பாந்தோட்டை, பொலன்னறுவை ஆகிய இடங்கள் காற்றின் தரம் மிதமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை மாவட்டங்கள் “சிறந்த” காற்றின் தரம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.