‘போதை ஒழிப்போம்,பாதை வகுப்போம்’: புத்தளம் ஹுசைன் பள்ளிவாசலில் விசேட விழிப்புணர்வு!

Date:

‘போதை ஒழிப்போம், பாதை வகுப்போம்’ என்ற கருப் பொருளில் புத்தளம் யா ஹுசைன் பள்ளிவாசலில்  விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

பள்ளிவாசலின் தலைவர் அஷ் ஷெய்க் ஷாபி ஸஃதி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வு  நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் பிரதேச பொலிஸ் அதிகாரிகள், சர்வமத் தலைவர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை புத்தளம் மாவட்டத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் பிள்ளையார் கோவில் குருக்கள் நகர சபை உறுப்பினர் சகோதரர் சிகான், கிராம சேவகர் ரஸ்மி (GS) மற்றும் பள்ளிவாசலின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதேநேரம்,  போதை ஒழிப்பை எப்படி கையாள வேண்டும், அதற்கான நடைமுறைகள் யாவை என்பதை இரத்தின சுருக்கமாக பொலிஸ் அதிகாரிகள்   கருத்துக்களை முன் வைத்தனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களும் போதை ஒழிப்பு பற்றின பல்வேறு விடயங்களையும் தெளிவுபடுத்தல்களையும் குறிப்பிட்டார்.

இதேவேளைபிரபல உளவியல் ஆலோசகர் சகோதரர் ஆதில் ஹசன் சமூகத்தை அச்சுறுத்தும் போதை என்ற தலைப்பில் சிங்களத்திலும் தமிழிலும் உரையாற்றினார்.

. இந்நிகழ்வு இரவு 9.30 மணிவரை சமூக சீர் திருத்தத்திற்கான தலைப்புகளில் தலை சிறந்த உலமாக்களின் உரைகளோடு மிக சிறப்பாக நிறைவு பெற்றதுடன் ஏராளமான இளைஞர்களும் இதன்போது கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...