மகிழ்ச்சியான நாடு : 6வது முறையாகவும் முதலிடம் பிடித்தது பின்லாந்து!

Date:

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.

டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை முறையே 2, 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 125-வது இடத்தில் நீடித்துள்ளது.

அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும்...

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...