Sunday, November 8, 2026

மரக்கறிகளின் விலை குறையும் சாத்தியம்

1 min read

எரிபொருள் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலையும் குறையும் என அனைத்து இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களும் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை குறைவினால் மரக்கறி போக்குவரத்து செலவும் குறையும் என அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் அரிசி விலையும் குறையும் என தெரிவிக்கப்படுகின்றது.