மார்ச் மாதத்தில் 53,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!

Date:

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 53 ஆயிரத்து 838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளே அதிகம் என்றும் குறிப்பாக 12 ஆயிரத்து 762 ரஷ்ய பிரஜைகள் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளையும், ஜேர்மனியில் இருந்து 4,289 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,937 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,716 பேரும் இலங்கை வந்துள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 264,022 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...