மின் கட்டணம் குறையும்? :எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

Date:

ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளித்தால் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் தவறான கேள்வியை எழுப்பினார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடும் ஆட்சேபனைக்கு அமைவாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இது பெரும்பான்மையான உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஒரு உறுப்பினரின் ஆட்சேபனையை முழு ஆணைக்குழுவின் ஆட்சேபனை என்று விவரிப்பது தவறு.

இந்த மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும் போது, ​​டிசம்பருக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும்.

முடிந்தால், ஜூலையில் குறைக்கப்படும். மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும். அந்த திட்டத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். அப்போது ஜூலை மாதத்திற்குள் மின்கட்டணத்தை குறைக்கலாம் என கூறினார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...