ஜூன் 22 – 25 திகதிகளில் இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச் சண்டைக் கழகத்தின் முஆய் தாய் விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான இலங்கைப் போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்கான அமெச்சூர் போட்டிகள் கடந்த ஞாயிறன்று நிறைவடைந்தன.
இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் இந்தத் தெரிவுப் போட்டிகள் நடைபெற்றன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுவேறாக பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற 16 பேர் தெரிவின் அடுத்த சுற்றுக்குத் தெரிவாகினர்.
விரைவில் இவர்களில் இருந்து சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதியானவர்கள் ஐவரைத் தெரிவு செய்வதற்கான போட்டிகள் நடைபெறும் என முஆய் தாய் இலங்கைப் பிரதிநிதி ரொஷான் துமிந்த ‘நிவ்ஸ் நவ்’ க்குத் தெரிவித்தார்.
நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த இந்தப் போட்டிகளை தற்போது அமெச்சூர் மட்டத்தில் நடத்துவதற்கு தம்மால் முடிந்திருப்பதாகவும் அனுசரணையாளர்கள் உதவும் பட்சத்தில் இமமுறை சர்வதேச விருதினை வெல்லும் வாய்ப்பினை இலங்கை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த அமெச்சூர் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக நட்டாலி டி சில்வா (வன்குயிஷ் முஆய் தாய் – நுகேகொட) சிறந்த வீரராக எச்ஜிகேகே குணவர்தன (ஹங்குராங்கெத்த முஆய் தாய் கழகம்) ஆகியோர் தெரிவாகினர்.
பெண்களுக்கான சம்பியன்சிப் விருதை ரத்னபுர ஹெவன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடமியும் ஆண்களுக்கான சம்பியன்சிப் விருதை குருநாகல லயன் பவர் மாஷல் ஆர்ட் அகடமியும் வென்றன.
பெண்கள் பிரிவில் 4 பேர் தங்கப் பதக்கம் வென்றனர். ஆண்களுக்கான பிரிவில் 12 தங்கப் பதக்கங்கள் வெல்லப்பட்டன.
கஹட்டோவிட்டா UMC கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஏழு வீரர்களில் மொஹமட் ராஹில், மொஹமட் காலித் ஆகிய இருவரும் தாம் கலந்து கொண்ட பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
பெண்கள் பிரிவு
- 45 Kg -S.Saraniya (Heaven sports academy Ratnapura )
- 51Kg – Natalie de silva (Vanquish muaythai Nugegoda )
- 54 Kg – WWNL Kumari (Haguranketha muaythai club )
- 71Kg – KAD Abeysekera (Heaven sports academy Ratnapura )
ஆண்கள் பிரிவு
- 48kg – LMN Perera (Lion power martial art academy Kurunegala )
- 51 Kg – P.G Chamuditha janaka(Dragon Muaythai Galle )
- 54Kg – HGKK Gunawardena (Haguranketha muaythai club )
- 57Kg – JID Rathnayaka (Haguranketha muaythai club )
- 60Kg- P Gayan pradeep( Lion power martial art academy Kurunegala )
- 63.5 Kg – SS de Silva (CFC Muaythai )
- 67kg – R Aravinda Shey (Shed Muaythai )
- 71Kg – AAMP Amarasinghe (Life fitness muaythai gym)
- 75Kg – Gevin Linden (vanquish muaythai nugegoda )
- 81Kg – Ajmal Yakoob ( AJ Muaythai academy)
- 91 kg – S weerasinghe (ICFC muaythai club )
- 91+ Kg – RMNI Bandara (Life fitness muaythai gym)