உக்ரைன் மீது ரஷ்யா போர் போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷ்ய அதிபர் புடின் சென்றுள்ளார்.
போர் இன்று 389-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா -உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
இதனிடையே, இந்த போரில் கிழக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார்.
போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு இன்று ரஷ்யா அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார்.
மரியுபோல் நகரை ரஷ்யா படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார்.
ரஷ்யா அதிபர் புடினின் இந்த பயணம் உக்ரைன் – ரஷ்யா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.