பாடசாலை மூன்றாம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாணவர்களுக்கான பாடப்புத்தக விநியோகம் 3ஆம் தவணை முடிவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்