ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது: அனுர

Date:

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என தேசிய மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் அபிவிருத்திக்கு ஒட்டுமொத்த மாற்றம் அவசியம், டொலருக்கான தேவை குறைவு, பொருளாதாரச் சரிவு, இறக்குமதித் தடை, டொலரின் நிரம்பல் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது என்றார்.

விரும்பிய இலக்குகளை அடையத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க புதிய சந்தைகளைக் கண்டறிந்து பெறுமதி கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...