ரோயல் அகடமி கல்வியகத்தில் கல்வி கற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு ரோயல் அகடமி கல்வியகத்தின் முதல்வர் கலாநிதி எம்.என்.லுக்மானுல் ஹக்கீம் மற்றும் பணிப்பாளர் ஜே.எப்.ரெனால்ட் ரிகான் ஆகியோரின் தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது
இதில் 122 மாணவர்கள் டிப்ளோமா நிலை சான்றிதழ்களையும் 30 மாணவர்கள் சான்றிதழ் நிலை கற்கைநெறிக்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
மேலும், அதி விஷேட சித்தி பெற்ற 05 மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
இவ் வைபவத்தின் பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம்.எஸ்.ஜீவசுதன் அவர்கள் உட்பட பல முக்கிய கல்வியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கல்வியகத்தின் நிறுவுனர் எஸ்.வை.பெணில்டஸ் அவர்களும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டதுடன் அவர் தனது உரையில் தொடர்ந்தும் எதிர்வரும் காலங்களில் குறைந்த செலவில் பல தரமான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.