லண்டன் செல்கிறார் அலி சப்ரி!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 22வது பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் (CFAMM) கலந்து கொள்ள உள்ளார்.

மார்ச் 15ஆம் திகதி லண்டன் மால்பரோ ஹவுஸில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக இன்று 13ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாய தின கொண்டாட்டங்களிலும் வெளிவிவகார அமைச்சர் கலந்து கொள்வார்.

இன்று காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் மதிப்புகள் மற்றும் அபிலாஷைகளை கோடிட்டுக் காட்டும் காமன்வெல்த் சாசனம் கையெழுத்திடப்பட்ட 10 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

இந்த விழுமியங்களை அடையாளப்படுத்தும் “அமைதிக்கான காமன்வெல்த் நாடுகளின் கொடி” ன்ற முன்முயற்சிக்கு உறுப்பு நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவிக்கும்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வெளியுறவு அமைச்சர்களுக்காக மூன்றாம் சார்லஸ் மன்னர் ஏற்பாடு செய்திருந்த விழாவுடன் நிகழ்ச்சி நிறைவடையும்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...