உலக சந்தையில் விலைகள் அதிகரிக்க வேண்டியிருந்தாலும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது வரை காணப்படும் எரிவாயுவின் விலை அவ்வாறே தொடரும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள போதிலும் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.