வரிக்கொள்கைக்கு எதிராக நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை !

Date:

அரசாங்கத்தின்  வரிக்கொள்கைக்கு எதிராக நாளை (09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் இன்று காலை 6.30 முதல் நாளை (09) காலை 6.30 வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை இரத்து செய்தமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மருந்தாளர்கள், கதிரியக்க நிபுணர்கள், தாதி உதவியாளர்கள், அம்பியூலன்ஸ் சாரதிகள் உள்ளிட்ட கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்களே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்களும் தாதியர்களும் கலந்துகொள்ளவில்லை.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...