வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி இதுவரையிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அரசாங்க அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல சீட்டுகளையும் வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
எனினும், அவற்றைக் கட்டுகளாக தயார் செய்து பொலிஸ் பாதுகாப்பில் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.