பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்கு (சிறப்பு) 10-15 லீட்டராகவும், முச்சக்கர வண்டிகளுக்கு (பொதுவாக) 5-8 லீட்டராகவும், மோட்டார் சைக்கிள்கள் 4 லீட்டலிருந்து 7 லீட்டராகவும், பஸ்கள் 40 லீட்டலிருந்து 60 லீட்டராகவும், கார்களுக்கு 20 லீட்டலிருந்து 30 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.