அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Date:

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமழான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பலர் காயமடைந்ததாக பலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ள நிலையில், மசூதிக்குள் இருந்தவர்களை இஸ்ரேல் பொலிஸார் தாக்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

மசூதிக்குள் நடந்த தாக்குதலுக்கு பலஸ்தீன அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர்கள் பட்டாசுகள், கற்களுடன் மசூதிக்குள் புகுந்ததால், தாங்களும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி யதாகவும் இஸ்ரேல் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு பதிலடியாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான பெய்ட் உம்மரில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்தனர் மற்றும் இஸ்ரேலிய வீரர்கள் மீது பாறைகள் மற்றும் வெடிபொருட்களை வீசியதாக சர்வதேச ஊடகஙகள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...